"சிவபெருமானே ஜெருசலேமை காப்பாற்றும்"- மிஷனரிகள் கோவில்களில் ஒட்டிய போஸ்டர்களுக்கு இந்து மகாசபா பதிலடி.!

Update: 2021-04-17 01:45 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் எங்கும் பல இடங்களில் "இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்" என்று எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தேர்தல் முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த போஸ்டர்களை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் இதுகுறித்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சில போஸ்டர்கள் கோவில் சுற்றுச் சுவர்களிலும் சில கோவில்களுக்கு உள்ளேயும் கூட ஒட்டப்பட்டிருந்தது இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது மதத்தைப் பரப்பும் நோக்கிலும் அரசியல்வாதிகள் இடையே தங்களது செல்வாக்கை காட்டும் வகையிலும் எட்டப்பட்டதாக கருதப்பட்ட இந்த போஸ்டர்களை கோவில்களில் ஒட்ட வேண்டிய அவசியம் என்ன என்று பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி புகார் அளித்ததோடு தமிழ் புத்தாண்டு போல் இந்த போஸ்டர்கள் நீக்கப்படவில்லை என்றால் தாய் மதம் திரும்பச் சொல்லி அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பதிலடியாக போஸ்டர்கள் ஒட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்நிலையில் அகில பாரத இந்து மகாசபா, "சர்வ லோகங்களுக்கும் ஈஸ்வரனாகிய சிவபெருமானே! ஜெருசலேமை காப்பாற்றும்!!" என்று தங்கள் அமைப்பின் பெயரையும் போட்டு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். ஆனால் மிஷனரிகள் எந்த அமைப்பு அல்லது அச்சகத்தின் பெயரையும் குறிப்பிடாமல் மொட்டைக் கடுதாசி போல் போஸ்டர் ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

Similar News