நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை!! துணை மானியக் கோரிக்கை விவரம்!!
By : Bharathi Latha
Update: 2026-03-14 13:45 GMT
மக்களவையில் 2-ம் கட்ட துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். தற்போது மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் காரணமாக ஏற்படும் சவால்களை சமாளிக்க, ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிலைத்தன்மை நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ரூ.50.65 லட்சம் கோடியிலிருந்து, ரூ.49.65 லட்சம் கோடியாக நடப்பு நிதியாண்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மதிப்பீட்டில் மொத்த செலவை மத்திய அரசு குறைத்துள்ளது. ஜனவரி மாதம் வரை அரசு ரூ.36.90 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.
உரம் மானியத்துக்காக கூடுதலாக ரூ.19,230 கோடியும், பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மானியத்துக்கு ரூ.23,641 கோடி செலவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு ரூ.41,822 கோடி உட்பட இதர செலவுக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.