சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகளின் முக்கிய அம்சங்கள்!!

Update: 2026-03-12 13:45 GMT

2027-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் 2 அடுக்கு மேம்பாலப் பணிகள்  நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய மண்டல அலுவலர் வீரேந்தர் சாம்பியால் தெரிவித்தார். இப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.


21 கி.மீ. தூரம் கொண்ட புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. உள்ளூர் நகரப் போக்குவரத்துக்காக முதல் அடுக்கு, சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கனரக சரக்கு வாகனங்களுக்காக பிரத்யேகமாக 2-வது அடுக்கு அமைக்கப்படுகிறது.


தமிழகத்தில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. தற்போது ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News