இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு!! ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கு மாற்று வழிகள்!!

Update: 2026-03-12 10:42 GMT

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளது. மாற்று வழித்தடங்கள் மூலம் எண்ணெய் இறக்குமதி 75% ஆக உயர்ந்துள்ளது.


உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் 5-ல் ஒரு பங்கு இதன் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. ஈரான் முடக்கியுள்ளதால், இந்த வழியாக எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது. 


இந்தியா இறக்குமதி செய்யும் நாடுகளில் அல்ஜீரியா, அங்கோலா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சவுதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 40 நாடுகள் அடங்கும். மத்திய அரசு 5.33 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலிய பொருட்களுக்கான இருப்பு வசதிகளை நிறுவியுள்ளது.

Tags:    

Similar News