நிதி மேம்பாட்டை நோக்கி வேகமாக முன்னேறும் இந்தியா - அரசின் சாதனைகளை வெளிப்படுத்தும் புள்ளிவிவரம்!

Update: 2021-02-28 01:30 GMT

நிதி உட்புகுத்தலுக்குப்பின், நிதி மேம்பாட்டை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது. நிதிநிலை அறிக்கையில், உள்கட்டமைப்புக்கு தைரியமான இலக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இலக்குகளை நிறைவேற்ற முதலீடுகளை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிதி அமைப்புகளை வலுப்படுத்த, தனது வங்கித்துறைகளை வலுப்படுத்த அரசு உறுதியுடன் உள்ளது.

நாட்டில் 130 கோடி பேர் ஆதார் அட்டை வைத்திருப்பதாகவும், 41 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் 55 சதவீதம் கணக்குகளை பெண்கள் வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றரை கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது.

முத்ரா திட்டம் மூலம், சிறு தொழில் முனைவோர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பின்தங்கியவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள்.

பிரதமரின் கிசான் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் 11 கோடி விவசாய குடும்பங்கள் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடியை, தங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்றுள்ளனர். சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வாநிதி திட்டம், இந்தப் பிரிவில், முதல் நிதி உட்புகுத்தல் நடவடிக்கையாகும். 

சுமார் 15 லட்சம் வியாபாரிகளுக்கு, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் பெற ட்ரட்ஸ் (TREDS), பிஎஸ்பி டிஜிட்டல் ( PSB Digital) போன்ற தளங்கள் உள்ளன. கிசான் கடன் அட்டைகள், சிறு விவசாயிகள், கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களை போன்றோரை முறைசாரா கடனிலிருந்து விடுவித்துள்ளன.

Similar News