தேவாலயத்திற்கு சென்ற ராகுல் அருகிலிருந்த இந்து கோவிலுக்கு செல்லாதது ஏன்?

Update: 2021-03-03 11:12 GMT

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார். அங்குள்ள பள்ளியில் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று வழிபட்டார். ஆனால் அவர் தங்கியிருந்த கடற்கரை விருந்தினர் மாளிகைக்கு அருகே உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லாதது இந்துக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மதசார்பற்ற ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்ற மாயையை உண்டாக்கி வரும் காங்கிரஸ் தற்போது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறிக்கொண்டு கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில் இந்த சுற்றுப்பயணம் மூலம் கட்சியினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக நேரு, இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தி என ராகுல் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் குமரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஆனால் அவர்களை ஒப்பிடும் போது ராகுல் காந்தியின் இந்த பயணம் முழுவதுமே மத சாயத்துடன் இருந்தது. குறிப்பாக இந்துக்களின் ஆதரவை இழந்து விட்டதால் தற்போது சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக ராகுலை ஒரு கிறிஸ்தவ தலைவராக காட்ட காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்கு முன் கன்னியாகுமரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திரா காந்தி அங்கிருந்த பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார் என்றும் ஆனால் தற்போது ராகுல் காந்தியை ஏன் அக் கட்சியின் பிரமுகர்கள் நீ கோவிலுக்கு அழைத்துச் செல்லவில்லை என்றும் அக்கட்சியினரே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி பிறகு முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு உள்ள தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார். பிறகு அங்கு மாணவர்களுடன் உரையாடினார் அப்போது ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்பதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவருமே கிறிஸ்தவ மாணவர்கள் என்பதும் ஒரு கசப்பான உண்மையாக இருக்கிறது.

அதன்பிறகு 12க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ராகுல் ஒரு இந்து கோயிலுக்கு கூட செல்லவில்லை. இதனால் ராகுல் தன்னை ஒரு கிறிஸ்தவ தலைவராக காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்று நேரு காலம் முதல் காங்கிரசை ஆதரிக்கும் பெரும்பாலான காங்கிரஸ் மூத்த வாக்காளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும் காங்கிரஸ் தன்னை ஒரு மதசார்பற்ற கட்சியாக வெளியே காட்டிக் கொண்டு வாக்கு வங்கியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கிறிஸ்தவ சமுதாயத்தினரை ஆதரித்து இந்துக்களை புறக்கணித்து வருவது அவர்களது வாக்கு வங்கியை மேலும் குறைக்கவே செய்யும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News