ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதி!! இந்தியாவின் நடவடிக்கை!!

Update: 2026-04-02 10:44 GMT

ஈரானிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ள நிலையில், 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் குஜராத் துறைமுகத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. 


ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா இந்த கச்சா எண்ணெயை வாங்கியிருக்கலாம். அமெரிக்கா கொடுத்த 30 நாள் அவகாசத்தை பயன்படுத்தி இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். 


ஈரானின் கார்க் தீவிலிருந்து பிங் ஷுன் என்ற கப்பல் குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த கச்சா எண்ணெயை வாங்குவது யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. ஆனால், வாடினார் பகுதியில் ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் நயாரா எனர்ஜி சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Tags:    

Similar News