கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் செலவிற்கு பயன்படுத்துவதை தடுக்க கிடுக்குப் பிடி!

Update: 2021-03-05 01:45 GMT

தேர்தலில் செலவு செய்வதற்காக அதிக அளவிலான பணம், நகை மற்றும் இதர விலைமதிப்பான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பது அல்லது கொண்டு செல்லப்படுவது பற்றி தெரிந்தாலோ அல்லது தகவல் கிடைத்தாலோ,

  • இலவச தொலை பேசி எண் : 1800 425 6669
  • பேக்ஸ் எண் : 044 - 28271915
  • இ-மெயில்: itcontrol.chn@gov.in
  • வாட்ஸ் அப் எண் : 9445394453.

ஆகிய வழிகளில் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.

தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது பற்றி புகார் தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை வருமானவரித்துறை தலைமை இயக்குனரகம் அமைத்ததுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத் தேர்தல் ஆகியவை ஏப்ரல் 06-ம் தேதி நடைபெறவுள்ளதால், தேர்தல் செலவினங்களை கண்காணிப்பதற்கு வருமானவரித்துறை தலைமை இயக்கனரகத்தின் (புலனாய்வு) உதவியை, இந்திய தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.

தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக செலவு செய்யப்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற தேவையான உதவிகளை வழங்குவது வருமானவரித்துறை இயக்குனரகத்தின் பங்கு.

இதற்காக, தேர்தல் செலவிற்கு கணக்கில் காட்டப்படாத பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் வருமானவரித்துறையின் புலனாய்வு இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும்.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமானவரித்துறை தலைமை இயக்குனரகம்(புலனாய்வு), 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. 

Similar News