உலக சிட்டுக்குருவிகள் தினம் பற்றிய ருசிகரமான தகவல்கள்!

Update: 2021-03-20 11:29 GMT

இந்த நாள் முக்கியத்துவத்தை பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி தான் உலக சிட்டுக்குருவி தினம். இந்த சிட்டுக்குருவி தினம், சிட்டுக்குருவி மட்டும் இல்லாமல் எல்லா பறவைகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை பாதுகாப்பது எப்படின்னு தெரிஞ்சிக்கவும், நமக்கு ஞாபக படுத்துவதற்கான ஒரு தினம்.

சத்தம் மாசுபாடு அதிகரிப்பதாலும் காற்று மாசுபாடுகளாலும் இப்போலாம் இந்த குருவிகளை அதிகமா பார்க்க முடியறதில்லை. உலக சிட்டுக்குருவி தினம் என்பது Nature Forever Society of India மற்றும் Eco-Sys Action Foundation of France ஆகியவற்றோட கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்ட ஒரு முயற்சி என்று சொல்லலாம்.


இது சமூக ஆர்வலர் முகமது திலாவர் அவர்களால் தொடங்கப்பட்டது. "சுற்றுச்சூழலின் நாயகர்களில் ஒருவர்" என்ற பெயர் பெற்றவர் முகமது திலாவர். உலக சிட்டுக்குருவி தினத்தின் முக்கிய நோக்கம், நம்மில் இருக்குற இளம் இயற்கை ஆர்வலர்களை பறவைகளை நேசிக்க ஊக்குவிக்கவும், குறிப்பாக கடுமையான கோடை காலத்தில் அவற்றை கவனித்துக்கொள்ளவும் நினைவுபடுத்துவதும் தான்.

இந்த வாட்டி வதைக்குற வெயில்ல மனிதர்களைப் போலவே அந்த உயிர்களுக்கும் குளிர்ந்த நிழலான இடமும், தண்ணீரும் கொஞ்சம் தானியமும் மட்டும் தாங்க தேவை. நம்மால் முடிஞ்சவரை குருவிகளுக்கு ஏதாவது ஒன்ன செய்யணும்னு தூண்டும் தினம் தான் இந்த மார்ச் 20. வெறும் 25-40 கிராம் எடையுள்ள இந்த குருவிகளுக்கு பெரிய அளவுல நம்ம செலவு செய்ய வேண்டிய தேவையில்ல.


வீட்டுல இருக்க தானியமும், சாதமும் தண்ணீரும் அதுக்கு கொடுத்தாலோ போதும். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக, சிட்டுக்குருவிகளோட எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரத்திலும் குறைந்து கொண்டே வருவதாக wwfindia.org தகவல் மூலமா தெரியவந்துள்ளது. இந்த உலக சிட்டுக்குருவி தினத்தில், சிட்டுக்குருவிகளை மதிக்கவும் நேசிக்கவும் நம்ம குழந்தைகளுக்கும் நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்துக்கும் சொல்லிக்கொடுப்போம்.


 சிட்டுக்குருவிகளை கூண்டுல அடைக்காம அதோட கூடி வாழ குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்போம். அதோட இசையை கேட்டு ரசிக்க சொல்லிக்கொடுப்போம். கிராமத்து இடங்களில், இப்போவும் குருவிகளையோட இசையை ஈஸியா கேக்கலாம். ஆனால் நகரங்களில் இந்த வண்டி வண்டி சத்தம் அதிகமாக இருப்பதன் காரணமாக சிட்டுக்குருவிகள் சத்தத்தை நம் கேட்க முடியாமல் போய் விடுகிறது ஆனால் காலை நேரத்தில் ஒரு பூங்காவில் அல்லது ஒரு அமைதியான மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு அதன் ராகத்தை கேட்டால் அந்த இடம் தான் சொர்க்கம். ஆனால் அதற்கு நமக்கு தேவை எல்லாம் கொஞ்சம் பொறுமையும், ரசனையும் தான்.

Similar News