இந்தியாவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தென்பட்ட அரிய வகை மாண்டரின் வாத்து!

Update: 2021-03-09 11:44 GMT

ஆர்க்டிக் துருவ பகுதியை தாயகமாக கொண்டு உள்ள மாண்டரின் வாத்து இனம், 120 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் மீண்டும் தென்பட்டுள்ள நிகழ்வு, பறவை மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாண்டரின் வாத்து இனம், கிழக்கு பேல் ஆர்க்டிக் துருவப்பகுதியை தாயகமாக கொண்டவை.


இந்த வகை வாத்து இனம், வடக்கு அமெரிக்காவின் வுட் வாத்து இனத்தை ஒத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மாண்டரின் வகை வாத்துக்கள், பெரும்பாலும், சீனா, ஜப்பான், கொரியா, ரஷ்ய நாட்டின் சில பகுதிகளில் தான் அதிகளவில் இருக்கும்.


ஆனால், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள திப்ரு -ஷாய்கோவா தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள குளத்தில் மற்ற வாத்துக்களோடு இவை நீந்திக்கொண்டு இருந்ததை, பறவை நல ஆர்வலர் மாதப் கோகோய் பார்த்து உள்ளார்.


 இதுதொடர்பாக, பறவைகள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளதாவது, துருவப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய நாடுகளில் வசித்து வரும் இந்த மாண்டரின் வாத்துகள், தற்போது இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகை தந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதற்கு முன், 1020 ஆண்டுகளுக்கு முன்னதாக, அதாவது 1902 -ஆம் ஆண்டில், இந்த வாத்து இனம், இந்தியாவிற்கு வந்து உள்ளதாக குறிப்பில் உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர். 18 வினாடிகள் கால அளவிலான, இந்த மாண்டரின் வாத்து குறித்த வீடியோவை, மத்திய வனத்துறை, சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கவுரவித்து உள்ளது.

Similar News