கோரிக்கையை ஏற்ற ஐ.நா சபை! இந்தியாவின் திட்டத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு!

Update: 2021-03-06 04:51 GMT

முதல் முறையாக 13 துறைகள் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார்.

துறையுடன் தொடர்புடைய ஒட்டுமொத்த சூழலுக்கு உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டம் பயனளிக்கிறது. வாகனம் மற்றும் மருத்துவத் துறையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மற்றும் மூலப் பொருட்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும்.

மேம்படுத்தப்பட்ட பேட்டரிகள், சூரிய மின்சக்தி தகடுகள் மற்றும் சிறப்பு எஃகு ஆகியவற்றின் உதவியுடன் நாட்டின் எரிசக்தித் துறை நவீனமயமாக்கப்படும் என அவர் கூறினார்.

அதேபோல், ஜவுளித்துறை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிலில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், ஒட்டு மொத்த வேளாண் துறைக்கும் பயனளிக்கும்.

இந்தியாவின் விருப்பத்தை தொடர்ந்து, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது பெருமையான விஷயம் என பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் திட்டத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இத்திட்டம் ஐ.நா பொதுச் சபையில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது நமது விவசாயிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என அவர் கூறினார்.

நோய்களில் இருந்து மக்களை காக்க, சிறு தானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறித்த உலகளாவிய பிரசாரத்தை 2023ம் ஆண்டில் தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

2023ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக ஐ.நா அறிவித்ததன் மூலம், உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும், சிறு தானியங்களுக்கான தேவைகள் மிக வேகமாக அதிகரிக்கும், இது நமது விவசாயிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என அவர் கூறினார். இந்த வாய்ப்பை வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Similar News