கோவில் அடிமை நிறுத்து என்ற பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் தோளூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இடிக்கப்பட்டு உள்ளது இந்த பிரச்சாரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் இந்து கோவில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோவில்களுக்கு என்ன தனித்துறை ஒதுக்கப்பட்டு கோவில்கள் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு கோவில்கள் சரிவர அடிப்படை பராமரிப்பு கூட இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலின் வரலாறு சிறிது சிறிதாக அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்துக்களுக்கு கோவில் இருந்ததா என்று கேட்கும் அளவிற்கு இந்து கோவில்கள் இருந்த இடம் தெரியாமல் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கோவில்களில் சிலை திருட்டு, கோவில்களில் உண்டியல் திருட்டு, கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு சமூக விரோத செயல்கள் கோவில்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையெல்லாம் தடுப்பதற்காக சத்குரு தலைமையில் கோவில் அடிமையை நிறுத்து என்ற பரப்புரை சமூகவலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தங்கள் பகுதியில் இருக்கும் சிதிலமடைந்த கோவில்களை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பல்வேறு பக்தர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் தோளூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இருந்ததாகவும் அவற்றை ஒரே நாளில் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி உள்ள செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தக் கோவில் எதற்காக இடிக்கப்பட்டது என்பதற்கான செய்திகள் தெரிய படாத நிலையில் இது போன்ற பழமையான கோவில்களை பராமரிக்க வேண்டிய அறநிலைத்துறை வாய்மூடி மௌனம் காப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்து அறநிலைத் துறையிடமிருந்து கோவில்களை மீட்டு பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் மக்களிடம் பிரபலமடைந்து வரும் நிலையில் அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.