சூப்பர்ஸ்டார் நடிக்கும் 'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவது எப்போது வெளியான தகவல்!

Update: 2021-04-25 15:58 GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. மேலும் திடீரென ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைவது எப்போது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் மே 10-ஆம் தேதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும் அதை நோக்கி பணிகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.






மேலும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி வரும் தீபாவளியன்று இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி. இமான் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட குடும்ப செண்டிமெண்ட் படம் என்பதாகும்.

Similar News