வெங்கட் பிரபுவின் தயார் மறைவு - திரையுலகினர் அஞ்சலி!

Update: 2021-05-10 08:45 GMT

இசையமைப்பாளர், தயாரிப்பாளருமான கங்கை அமரனின் மனைவியும், இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை அம்மையார் நேற்று இரவு காலமானார் அவருக்கு வயது 69.


இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவாராக விளங்கினார். இவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, வெற்றிகரமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம்வருகிறார். மேலும் இவரது சகோதரர் பிரேம்ஜி நடிகர் மற்றும் இசையமைப்பாளரும் கூட.

அவரது தாயாருக்கு உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:30 மணியளவில் இறந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News