தீவிரவாதியாக சமந்தா நடிக்கும் வெப் சீரிஸ் - ஓடிடியில் வெளியீடு!

Update: 2021-05-16 11:45 GMT

விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக நடிக்கிறார் சமத்தா.


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திருமணம் ஆன பிறகும் நடித்து வருகிறார். தற்போது வெப் தொடரில் நடித்துள்ளார். ஒடிடியில் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற 'தி பேமிலி மேன்' என்ற வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடித்துள்ளார் சமந்தா. அவர் நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். இந்த வெப்தொடரை பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர்.


இந்த வெப் தொடரில் வில்லியாக நடித்துள்ளாராம் சமந்தா. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத கும்பல் ஒன்றின் ஸ்லீப்பர் செல் ஏஜெண்ட்டாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Similar News