எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை - கி.ரா மறைவுக்கு உருகிய பிரியா பவானி சங்கர்!

Update: 2021-05-18 07:45 GMT

"எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை" என எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு நடிகை பிரியா பவானி சங்கர் உருகியுள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், "தமிழ் பேசினா fine கட்டனும்னு class leader-அ பெயர் எழுத சொல்ற school-ல, we are trained and tamed to think in English for 14 long years. அப்படி ஒரு வாழ்க்கைமுறையில் ஒரு private librarian பரிந்துரையில் 'கோபல்ல கிராமம்' மூலம் அறிமுகமானவர் தான் கி.ரா அப்புறம் 14,15 வயதில், 'வயது வந்தவர்களுக்கு மட்டும்' அப்படிங்கற பேர் நம்மல impress பண்ண, ஒரு குறுகுறுப்புடன் அதை librarian கிட்ட வச்ச என்னை நினைச்சா எனக்கே சில சமயம் இப்படி இருக்கும். அதன் வழி கி.ரா இன்னும் பரிச்சயமாகிறார். அவருடைய சிறுகதைகள் நான் வாழாத உலகத்தை மனசுல பதியவச்சுது. எழுத்தாளர்கள் என்றுமே மறைவதில்லை. இப்பவும் என்னை புன்னகைக்க வைக்கிறார். நிறைவான வாழ்க்கை" என குறிப்பிட்டுள்ளார்.


நடிகைகளுக்கு தமிழ் தெரிவதே பெரிய விஷயம் அதிலும் எழுத்தாளரை தெரிந்து அவர் எழுதிய புத்தகத்தை அவர் மறைவின் போது ஞாபகப்படுத்துவது ஒரு நடிகையிடம் எதிர்பாராதது என ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Similar News