இளமைகால நண்பருடன் ஜாலியாக பொழுதை கழித்த சூப்பர் ஸ்டார்..!

Update: 2021-05-22 05:45 GMT

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரும இணைந்து ஜாலியாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

70'களில் அறிமுகமாகி 80'களில் உச்சம் அடைந்த இரு நட்சத்திரங்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன் பாபு இருவரும் முறையே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தை அடைந்தவர்கள். இவர்கள் இருவரும் நீண்ட காலம் முதல் நண்பர்கள். அரம்பகால ஓய்வு நேரங்களில் இருவரும் மணிக்கணக்கில் உரையாடுவதும், ஊர் சுற்றுவதும், ஒன்றாக உணவு உட்கொள்வதும் இப்படி இருவரும் இணைபிரியாத நண்பர்களாக வலம் வந்தனர்.


பின்னர் காலங்கள் செல்ல இருவரும் பார்த்துக்கொள்வதே அரிதாகிவிட்டது. தற்பொழுது ரஜினிகாந்த் இயக்குனர் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஐதராபாத் நகரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலுமே படப்பிடிப்பு அதிகம் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் தான் ஒய்வு வேளையில் தன் இளைமகால நண்பரு மோகன்பாபுவுடன் நீண்ட நேரம் செலவழித்திருக்கிறார் ரஜினிகாந்த்.


இந்த புகைப்படங்கள்தான் தற்பொழுது இணையத்தில் வலம் வருகின்றன. இதனை மோகன்பாபு'வின் மகன் விஷ்ணு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News