கடும்போட்டிக்கு நடுவே ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை கைப்பற்றிய ஓ.டி.டி நிறுவனங்கள்!

Update: 2021-05-26 13:15 GMT

தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் "இரத்தம் ரணம் ரௌத்திரம்" படத்தை 2 ஓ.டி.டி நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கிறது.

"பாகுபலி" என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை மற்றுமோர் தளத்திற்கு எடுத்து சென்ற இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது "இரத்தம் ரணம் ரௌத்திரம்" (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். டி.வி.வி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.


இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில் மற்றொருபுறம் இந்த திரைப்படத்தை கைப்பற்றுவதற்கு ஓ.டி.டி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வந்தன. இறுதியாக இப்படத்தை இரண்டு ஓ.டி.டி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளுக்கு ஜீ 5 நிறுவனமும், இந்தி மொழிக்கு நெட் பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி இருக்கிறது.

Similar News