சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் மணிரத்னத்தின் வெப் சீரிஸ் 'நவரசா' வெளியீடு எப்போது?

Update: 2021-05-28 10:45 GMT

நவரசங்களை அடிப்படையாக கொண்ட வெப் சீரிஸ் தொடரை தமிழ் சினிமாவின் 9 முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்றனர். இதன் வெளியீடு பற்றிய அப்டேட் வெளிவந்துள்ளது.


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக 'நவரசா' என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர்.


மேலும் இதில், இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், நித்யா மேனன், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்விகா உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த தொடரின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. இதன் வெளியீடு வரும் ஆகஸ்ட் மாதம் என படக்குழு அறிவித்துள்ளது. நெட் ப்ளிக்ஸ்'ல் வெளியாகும் இதன் வெளியீட்டு தேதி விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News