"ஜகமே தந்திரம்" ட்ரைலர் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவினர்..!

Update: 2021-05-29 13:45 GMT

ஜுன் 1ம் தேதி "ஜகமே தந்திரம்" டிரைலர் வெளியாக இருக்கிறது.


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள படம் ‛ஜகமே தந்திரம்'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கொரோனோ இரண்டாம் அலையால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகிக்கொண்டே இருக்கிறது.

இறுதியாக இப்படம் ஓ.டி.டி'யில் ஜுன் 18ல் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ட்ரைலர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் எழுந்துள்ளது.



இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜூன் 1'ம் தேதி டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

Similar News