"என் பெயரில் உலாவும் போலிகளை நம்பாதீர்" என ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி இளம் நடிகர் துல்கர் சல்மான். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், அதிலும் குறிப்பாக பெண் ரசிகளைகள் அதிகம்.
மேலும் இவர் சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வமுடன் அதிக விரைவாகவும் செயல்படுபவர். ஆனால் இவர் பெயரில் போலி கணக்குகள் பெருமளவில் செயல்படுவதால் இணையத்தில் ரசிகர்களிடையே பெரும் குழப்பம் நிலவி வந்தது. தற்பொழுத இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், "இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவு செய்து எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி ஆள் மாறாட்டம் செய்ய வேண்டாம், இது நல்ல விஷயம் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.