சிம்பு-வுன் 'பத்து தல' பட பணிகளை துவங்கினார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
'மாநாடு' பட பணிகள் நிறைவடைந்த நிலையில் தனது அடுத்த படமான 'பத்து தல'யில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார் சிம்பு. இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கெளதம் மேனன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இந்நிலையில் பாடல் பதிவு வேலைகளை தொடங்கிவிட்டது படக்குழு. இரண்டு பாடல்களைப் பதிவு செய்து முடித்துவிட்டார் இசைபபுயல் ஏ.ஆர்.ரஹ்மான்.