தனது மூன்றாவது திரைப்படத்திற்கு தயாராகும் பிரபல பெண் இயக்குனர்.!

Update: 2021-06-06 10:00 GMT

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி-யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.


'வணக்கம் சென்னை, காளி' என இரு வித்தியாசமான கதை களங்களை கொண்ட படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பாக பெண்டலா சாகர் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார்.


இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தான்யா ரவிசந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் இதுபற்றி கிருத்திகா உதயநிதி கூறுகையில், "வணக்கம் சென்னை, காளி படங்களுக்கு பின் நான் இயக்கும் முன்றாவது படம் இது. சிறந்த கதை ஒன்று அமைய வேண்டும் என்று சிறிது காலம் எடுத்து கொண்டேன். அப்போது தோன்றியது தான் இப்படத்தை கதை. இது வாழ்வின் பயணத்தை பற்றிய கதை, இக்கதையில் பயணம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். இப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்படும்" என்றார்.

Tags:    

Similar News