'மாஷாஅல்லாஹ்' - மாநாடு முதல் பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த யுவன்!

Update: 2021-06-10 03:00 GMT

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.


முதன் முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு-வும், சிம்பு-வும் இணையும் படம் மாநாடு. இந்த கூட்டணியில் இசையமைப்பாளர் யுவன் இணைவது வேறு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு சிங்கிள் பற்றி அறிவிப்பை இசையமைப்பாளர் யுவன் வெளியிடுவார் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் பாடல் வெளியீட்டு தேதியை நேற்று யுவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.


'மாஷாஅல்லாஹ்' என்ற அந்த முதல் சிங்கள் பாடல் வரும் ஜூன் மாதம் 21ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார் இசையமைப்பாளர் யுவன். மேலும் மாநாடு படத்தின் இசை உரிமையை யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெகார்டஸ் நிறுவனம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News