"நான் கார்த்திக் சுப்புராஜின் மிகப்பெரிய விசிறி" - ஜோஜு ஜார்ஜ்!

Update: 2021-06-11 03:00 GMT

"நான் கார்த்திக் சுப்பராஜின் மிகப்பெரிய விசிறி" என மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் மலையாளத்தில் வெளியான 'நயாட்டு' படத்தில் மூத்த காவல்துறை அதிகாரியாக நடிப்பில் முத்திரை பதித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷுடன் 'ஜகமே தந்திரம்' படத்தில் இணைகிறார். நடிகர் ஜோஜு ஜார்ஜ் தமிழில் நடிக்கும் முதல்படம் இதுவாகும்.

தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தனுஷ் நடித்த ‛ஜகமே தந்திரம்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் வரும் 18-ஆம் தேதி வெளியாகிறது.


ஜோஜு ஜார்ஜ் கூறுகையில், ‛‛நான் கார்த்திக் சுப்பராஜின் மிகப்பெரிய விசிறி. இப்படத்தில் நடிக்க ஆடிசன் செய்த போது, ஒரு காட்சியை விவரித்து கார்த்திக் சுப்பராஜ் நடிக்க சொன்னார். அரைகுறை தமிழில் நடித்தேன். புன்னகையுடன் ஏற்றார்" என்றார்.

Similar News