ரசிகர்கள் ஷாக் : ஜகமே தந்திரம் ஓ.டி.டி வெளியீட்டில் சில பாடல்கள் நீக்கம்!

Update: 2021-06-12 11:15 GMT

ஜகமே தந்திரம் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுக்காக படத்தில் இடம் பெற்றிருந்த 'புஜ்ஜி' மற்றும் 'நேத்து' ஆகிய பாடல்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன் நடித்துள்ள படம் "ஜகமே தந்திரம்", சந்தோஷ் நாராயணன் இசை.

இப்படம் வருகிற 18'ம் தேதி ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த படத்தில் ரகிட ரகிட ரகிட, புச்சி, நேத்து, ஆல ஓல, பரோட்டா மாஸ்டர், கலரே கலர்வாசம் உள்ளிட்ட 11 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி வெளியீட்டுக்காக படத்தில் இடம் பெற்றிருந்த புஜ்ஜி மற்றும் நேத்து ஆகிய பாடல்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது, "பொதுவாக இந்த படம் தியேட்டர் அனுபவத்திற்காகத்தான் உருவாக்கப்பட்டது. அதனால் நிறைய பாடல்கள் படத்தில் சேர்க்கப்பட்டது. படத்திற்கு இடைவேளை இருக்கும் என்பதால் ரசிகர்களின் ரிலாக்சுக்காக சில பாடல்கள் உருவாக்கப்பட்டது. ஓடிடி தளத்தில் இடைவேளை இருக்காது என்பதால் பாடல்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை.


இதனால் புஜ்ஜி, நேத்து பாடல்கள் நீக்கப்பட்டது. வேறு சில சிறிய பாடல்களும் நீக்கப்பட்டது. இந்தப் படம் உலக அளவில் உள்ள மக்களுக்குச் சென்றடைய இருப்பதும் ஒரு காரணம். சில மாதங்கள் கழித்து தொலைக்காட்சியில் திரையிடப்படும்போது அந்தப் பாடல்கள் இடம்பெறும்" என அறிவித்துள்ளார்.

Similar News