வலிமைக்கு அடுத்து அஜித்துடன் மீண்டும் கை கோர்க்கும் இயக்குனர் வினாத்!

Update: 2021-06-17 10:00 GMT

'தல' அஜித்குமார் நடிக்கும் அடுத்த படமும் இயக்குனர் வினோத் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா'வின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்பொழுது 'வலிமை' படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இப்படம் தயாராகிறது.

கொரோனோ ஊரடங்கு காரணமாக தற்பொழுது

நிறுத்தப்பட்டிருக்கும் வலிமை படப்பிடிப்பு மீண்டும் கொரோனோ முடிந்தவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில் 'வலிமை' படம் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தின் பட்ஜெட் நிறையவே அதிகமாகிவிட்டதாம். அதைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட அஜித், மீண்டும் போனி கபூரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். இப்படத்தையும் வினோத் தான் இயக்கப் போகிறாராம்.

Similar News