பிக்பாஸூக்கு போட்டியாக 'சர்வைவர்' - சிம்பு தொகுத்து வழங்குகிறாரா?

Update: 2021-06-18 02:30 GMT

பிக்பாஸ்-க்கு போட்டியாக நடத்தப்படும் 'சர்வைவர்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு.


சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் பிரபலம், தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இதுவரை 3 சீசன் முடிவடைந்துள்ளது. இதனை போலவே மற்றொரு நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரே வீட்டிற்குள் நடக்கும் விஷயங்களை போட்டியாக அறிவித்து தொகுத்து வந்தனர். இந்நிலையில் தனித்தீவில் தங்க வைக்கப்படும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அதில் இறுதி வரை நின்று வெற்றி பெறுபவரை வெற்றியாளராக அறிவிக்கும் சர்வைவர் எனும் நிகழ்ச்சி ஒன்று விரைவில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மூன்று மாத காலம் இந்தியாவிற்கு வெளியில் உள்ள ஒரு தனித்தீவில் இதற்கான நிகழ்வு படமாக்கப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் சிலரிடம் பேசி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News