தன் மகன்களுடன் சந்தோஷமாக தந்தையர் தினத்தை கொண்டாடும் படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் அனைவராலும் நினைவு கூறப்பட்டடது. அதனையொட்டி தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் "தந்தையர் தின வாழ்த்துக்கள், எப்போதும் குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. நீங்கள்தான் எனது உலகத்தை அழகாக மாற்றினீர்கள்" என பதிவிட்டுள்ளார்.
இவரது சமீபத்திய படமான ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடதக்கது.