'மங்காத்தா-வை விட மாநாடு பெரிய படம்' - நம்பிக்கை அளிக்கும் வெங்கட்பிரபு
"மங்காத்தா-வை விட மாநாடு பெரிய படம்" என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடிக்க, இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படம் மாநாடு. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், "என்னோட கேரியர்ல மங்காத்தாவை விட இது பெரிய புராஜெக்ட். இந்தப்படம் அரசியல் படம் என்றாலும் புதுசா ஒரு ஜானர்ல முயற்சி பண்ணிருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஜானர்ல அரசியலை இதுல சொல்லிருக்கிறேன்.. அதனால் மக்கள் எதிர்பார்க்கிற படமாகவும் அவர்கள் எதிர்பாராத ஒரு படமாகவும் இந்த மாநாடு இருக்கும். பரிசோதனை முயற்சியிலான இதுபோன்ற திரைக்கதையில நடிக்க சிம்பு ஒத்துக்கிட்டது பெரிய விஷயம். அவரோட ரசிகர்களுக்கும் இந்தப்படம் ரொம்ப புடிக்கும்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "சிம்பு ஒரு காமன்மேனா நடிச்சிருக்காரு, சிம்பு - எஸ்ஜே சூர்யா இருவருக்குமான பேஸ் ஆப் தான் படமே. எஸ்ஜே சூர்யா கேரக்டர் பட்டி தொட்டியெல்லாம் படத்தை கொண்டுபோய் சேர்க்கும்.. ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் செகன்ட் யூனிட் டைரக்டர் மாதிரி வேலை பார்த்திருக்கார்" என்றார் அவர்.