இதுவரை ஆங்கிலத்தில் படத்தலைப்பு வைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Update: 2021-06-23 08:15 GMT

'தமிழ் வாழ்க', 'தமிழுணர்வு' என பேசி வரும் நடிகர்கள் கூட தன் படத்திற்கு தலைப்பை ஆங்கிலத்தில் வைக்கும் நிலை இருக்கும் போது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை ஆங்கிலத்தில் தன்படங்களுககு தலைப்பு வைக்கவில்லை.


சில காலமாக தமிழில் படத்தின் தலைப்பு வைத்தால் மட்டுமே வரி விலக்கு என்ற நிலை அமலில் இருந்ததால் தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும் நிலை இருந்தது. ஆனால் அந்த நிபந்தனை தற்பொழுது இல்லை என்பதால் படக்குழுவினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படங்களின் தலைப்பை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய்'யின் புதிய பட அறிவிப்பு கூட வெகுசமீபத்தில் "பீஸ்ட்" என ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தது.


ஆனால் இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களின் படத்திற்கு இதுவரை ஆங்கிலத்தில் பெயர் வைத்ததில்லை. மாறாக தமிழிலிலேயே பெயர்கள் வைக்கப்பட்டிருக்கும்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் ரஜினிகாந்த் இதுவரையில் தமிழில் 110 படங்களில் நடித்திருக்கிறார். ஆங்கிலத்தில் தலைப்பை வைத்ததில்லை என்று குறிப்பிட்டு பெருமைப்பட்டு வருகிறார்கள்.

Similar News