நடிகர் விஜயை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஆசை என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
நடிகர்கள் முதல் இயக்குனர்கள் வரை அனைவரும் தற்பொழுது ட்விட்டர் ஸ்பேசில் உரையாடுவது இயல்பாகிவிட்டது. மேலும் அது தங்களின் புதிய படத்திற்கு விளம்பரமாகவும் ஆகிவிடும் என்பதால் ட்விட்டர் ஸ்பேஸ் முறையை தற்பொழுது திரையுலகினர் அதிகமாக உபயோகித்து வருகின்றனர்.
ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2' படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின் அதன் தயாரிப்பாளர் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக T.முருகானந்தம் மிஷ்கின் டுவிட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்களிடம் உரையாடினார்.
அப்பொழுது ரசிகர், ‛‛உங்கள் இயக்கத்தில் விஜய் நடித்தால் அவர் எந்த வேடத்தில் நடிப்பார் என கேட்டார். அதற்கு "ஜேம்ஸ்பாண்ட்" என்று பதிலளித்தார் மிஷ்கின்.