விஜய்-க்கு இணையாக நடனமாட பயிற்சி எடுக்கும் நடிகை!

Update: 2021-06-27 05:15 GMT

விஜய்'க்கு இணையாக நடனம் ஆட பயிற்சி எடுக்கும் நடிகை பூஜா ஹெக்டே.


தமிழில் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் ஜீவா'வுடன் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் படங்கள் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியா நாட்டில் நடந்தது. அதன்பின் கொரானோ தொற்று காரணமாக படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.


தற்பொழுது கொரோனோ தொற்று குறைய துவங்கியுள்ளதையடுத்து மீண்டும் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே, டான்ஸ் ரிகர்சல் செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். படத்தில் விஜயுடன் இணையாக ஈடு கொடுத்து ஆட உதவியாக பயிற்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

Similar News