ராமேஸ்வரம் கடற்கரையில் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தேசிய விருது பெற்று தமிழில் முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ், இவர் தற்பொழுது அருண் மாதேஷ் இயக்கத்தில் செல்வராகவனுடன் இணைந்து சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சாணிக்காயிதம் படப்பிடிப்பு அங்கு தான் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவத்து குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.