சார்பட்டா படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் செல்வராகவன் ஆர்யா'வை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரேமில் வெளியாகியுள்ள இப்படத்தை பார்த்து பலதரப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "அருமையான படம் ரஞ்சித். படத்தின் ஒவ்வோரு காட்சியையும் ரசித்தேன். மற்றும் அன்பே ஆர்யா, ஒவ்வொரு பிரேமிலும் மிளிரிக் கொண்டே செல்கிறாய். உன்னை நினைத்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.