ஜப்பானில் புதிய சாதனை படைத்த சூப்பர் ஸ்டாரின் 'தர்பார்'!

Update: 2021-07-24 06:15 GMT

ஜப்பான் நாட்டில் திரையரங்குகளே அதிகரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 'தர்பார்' திரைப்படம் சாதனை படைத்துள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் அவர்களின் 'முத்து' படத்திற்கு பிறகு ஜப்பான் நாட்டில் ரசிகர்கள் அதிகமாகினர்.

அதனை தொடர்ந்து ரஜினியின் படங்கள் ஜப்பானில் தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்று வருகின்றன. ரஜினியின் ரசிகர்களான ஜப்பானியர்கள் தமிழகம் வந்து ரஜினியை சந்தித்த நிகழ்வும் நடந்தது. ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார்.


இந்நிலையில், கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் வெளியானது. படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு படமொன்றுக்கு, வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளை அதிகரிப்பது சாதனை. இதனை தமிழ்படமாகிய ரஜினியின் 'தர்பார்' செய்திருப்பது பெருமையாக பார்க்கப்படுகிறது.

Similar News