பிரபாஸ் படத்தில் இணையும் அமிதாப்பச்சன்!

Update: 2021-07-25 08:45 GMT

அடுத்ததாக பிரபாஸ் படத்தில் அமிதாப் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், அடுத்து நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இன்று முதல் அப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் தொடங்கியிருக்கிறார் நாக் அஸ்வின். இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச் சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


முதல் கட்டமாக பிரபாஸ் கலந்து கொள்ளாத நிலையில் அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் நாக் அஸ்வின். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் - அமிதாப்பச்சன் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

Similar News