யோகிபாபுவுக்கு இன்ப அதிர்ச்சியளித்த லெஜண்ட் சரவணன்!

Update: 2021-07-27 01:00 GMT

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் இணைகிறார் காமெடி நடிகர் யோகிபாபு.

இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் சரவணா ஸ்டார்ட்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் ஏற்கனவே காமெடி வேடத்தில் நடிக்க விவேக் ஒப்பந்தமானார். அவர் மறைந்ந காரணத்தினால் அந்த வாய்ப்பு தற்பொழுது நடிகர் யோகிபாபுவுக்கு சென்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்து இன்ப அதிர்ச்சியளித்துள்ளனர்.

Similar News