'வலிமை' டீசர் பற்றிய தகவல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Update: 2021-07-28 02:15 GMT

அஜித்'தின் 'வலிமை' படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மற்றும் ஹூமா குரேஷி நடித்துள்ள படம் 'வலிமை'. அஜித் நடித்து வெளிவரும் படங்களிலேயே இப்படத்திற்குதான் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பார்வை வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் 'வலிமை' படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிளை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுள்ளனர்.

Similar News