ரசிகர்கள் வரவேற்பில் 'நவரசா' முன்னோட்டம்!

Update: 2021-07-28 02:45 GMT

நேற்று வெளியான 'நவரசா' படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


மணிரத்னம், ஜெயேந்திரா தயாரிப்பில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் இணைந்த புதிய படைப்பு 'நவரசா', ஆந்தாலஜி வகையான இப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.


இப்படத்தின் முன்னோட்டம் நேற்று இணையத்தில் வெளியானது. வெளியான பின் இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மனிதர்களின் 9 உணர்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.

Similar News