மின்னல் வேகத்தில் நடைபெறும் 'அண்ணாத்த' படத்தின் டப்பிங்!

Update: 2021-07-29 02:30 GMT

சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது.


இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை டி.இமான். சமீபத்தில் மீதமுள்ள அனைத்து காட்சிகளும் சென்னையில் படமாக்கப்பட்டு படப்பிடிப்பு முடிவுபெற்றது.


இந்நிலையில் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் டப்பிங்கைத் தொடங்கியுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'அண்ணாத்த' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 4'ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News