"என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்" என நடிகர் சித்தார்த் புலம்பியுள்ளார்.
கடந்த வாரம் ஹிந்தி டிவி நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணம் அடைந்தார், இந்த தகவல் தவறாக தமிழ் நடிகர் சித்தார்த் மரணமடைந்தார் என சமூக வலைதளங்களில் பரவியது, சிலர் சித்தார்த் புகைப்படங்கள் பகிர்ந்தனர்.
இதனை பார்த்தி அதிர்ச்சியடைந்த சித்தார்த் இதுகுறித்து அவர் யு டியூப் நிறுவனத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், தனது டுவிட்டரில் "வேண்டுமென்றே என்னை குறிவைத்து தாக்குகிறார்கள், என் மீது வெறுப்பை கக்குகிறார்கள்" என்று கோபத்துடன் குறிப்பிட்டிருந்தார்.