"காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்கள் சிலர் கொண்டாடுவது ஆபத்தானது" என நடிகர் நஸ்ருதீன் ஷா கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ'வில் குறிப்பிட்டுள்ளதாவது, "ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி மீண்டும் அமைவது ஒட்டுமொத்த உலகையே கவலைஅடையச் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, அந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள், நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா அல்லது பழமையான காட்டுமிராண்டிதனத்துடன் வாழ வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.