தெலுங்கிலும் மெல்ல மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்!

Update: 2021-09-23 10:30 GMT

சிவகார்த்திகேயன் மெல்ல தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்து வருகிறார்.


இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இப்படம் நேரடியாக தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் இப்படத்திற்கு 'வருண் டாக்டர்' என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா, ஹீரோ ஆகிய படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News