'ருத்ரதாண்டவம்' படக்கதை உருவாக காரணமே ஒரு பாதிரியார்'தான் - இயக்குனர் மோகன்ஜி !

Update: 2021-09-25 07:45 GMT

'ருத்ரதாண்டம்' கதை உருவாக காரணமே ஒரு பாரிதியார் என இயக்குனர் மோகன்ஜி விளக்கமளித்துள்ளார்.




 


நாடகக்காதல் எவ்வாறு ஒரு குடும்பத்தை சீரழிக்கிறது என தனது படைப்பில் தெளிவாக கூறி வெற்றிபெற்ற இயக்குனர் மோகன்ஜி'யின் அடுத்த படைப்பு 'ருத்ரதாண்டவம்'. இப்படத்தில் கிருஸ்துவ மதத்தை வைத்து நடக்கும் வியாபாரம் பற்றி தெளிவாக கூறியுள்ளோம் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து இந்தத் திரைப்படம் அக்டோபர் 1'ம் தேதியன்று தியேட்டரில் வெளியாகிறது.




 


'ருத்ரதாண்டவம்' பற்றி மோகன்ஜி கூறியதாவது, "ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார். அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிறிஸ்தவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.




 


மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார். சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.




 


இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்தவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்தவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன்" என 'ருத்ரதாண்டவம்' படம் கதை மையக்கரு உருவான விதம் பற்றி இயக்குனர் மோகன்ஜி விளக்கமளித்துள்ளார்.

Similar News