அனுஷ்கா'தான் சந்திரமுகியா? - பி.வாசு விளக்கம்

Update: 2021-09-27 10:30 GMT

பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகத்தில் அனுஷ்கா நடிக்கிறார் என்ற தகவலுக்கு இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.




 


ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் பி.வாசு இயக்கும் 'சந்திரமுகி-2' படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் பரவி வந்தது.




 


இதற்கு இயக்குனர் பி.வாசு விளக்கமளிக்கையில், "ஜோதிகா வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அனுஷ்கா மட்டுமின்றி இன்னும் சில முன்னணி நடிகைகளிடமும் பேசி வருகிறோம். சந்திரமுகியாக அனுஷ்கா தான் நடிக்கிறாரா? இல்லை வேறு நடிகை நடிக்க உள்ளாரா? என்பது குறித்து படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Similar News