வெற்றி இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் தனுஷ் அதையடுத்து சேகர்கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படங்களுக்கு பிறகு யார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் தற்பொழுது சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ் நடிப்பார் என இயக்குனர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.