வித்யூத் ஜமாலின் பிரம்மாண்டமான 'சனக்'!

Update: 2021-10-06 12:30 GMT

நடிகர் வித்யுத் ஜாம்வால் கதாநாயகனாக நடித்த படம் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.




 


நடிகர் வித்யுத் ஜாம்வால் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'சனக்', கனிஷ்க் வர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சந்தன் ராய் சான்யல், நேகா துபியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் மருத்துவமனையை தீவிரவாதிகள் கைப்பற்றி நோயாளிகளை பிணை கைதிகாளாக்குகிறார்கள். வெளியில் காவல்துறையினர் பிணை கைதிகளை மீட்க பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, உள்ளே இருக்கும் வித்யூத் ஜமால் எப்படி தீவிரவாதிகளிடம் இருந்து பிணை கைதிகளை காப்பாற்றுகிறார் என்பதே கதை.




 


இப்படம் பற்றி வித்யூத் ஜமால் கூறியதாவது, "இந்த திரைப்படம் கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. அனைவரையும் போல நாங்களும் இப்படத்தின் பணிகளுக்காக சென்றோம். இப்படத்திற்காக கடுமையாக உழைத்து, பணிகளை நிறைவு செய்தோம்" என தெரிவித்துள்ளார்.

Similar News