வலிமை படத்தின் அப்டேட் நாளுக்கு நாள் புதுவிதமாக வந்துகொண்டிருக்கிறது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் இந்த படத்திற்குதான் அதிக எதிர்பார்ப்புகள் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.
இதனைதொடர்ந்து ஹூமா குரேஷி பைக் ஸ்டண்ட் காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் வினோத் அளித்துள்ள பேட்டியில் கொரோனா லாக் டவுனால் கதையில் நிறைய மாற்றினோம். எனவே அஜித்துக்கும், ஹூமா குரேஷிக்கும் காதல் காட்சிகள் கிடையாது. படத்தில் இருவரும் நண்பர்கள். அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.