"படபடவென பேசும் சிவகார்த்திகேயன் இதில் இல்லை" - டாக்டர் சிகா !

Update: 2021-10-10 08:15 GMT

"படபடவென பேசும் சிவகார்த்திகேயன் இதில் இல்லை" என டாக்டர் படம் பற்றி சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.




 


நேற்று திரையரங்குகளில் டாக்டர் படம் வெளியாகியது. ரசிகர்களிடத்தில் பெரும் வெற்றியை பெற்ற இப்படம் குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த சிவகார்த்திகேயன் கூறியதாவது,

டாக்டர் படத்தின் சிறப்பு என்ன?

இதுவரை பார்த்த படபடவென பேசுபவனாக அல்லாமல், இப்படத்தில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை பார்ப்பீர். என் கேரக்டரை இயக்குனர் நெல்சன் வித்தியாசமாக உருவாக்கியுள்ளார். நானே என்னை கட்டுப்படுத்தினாலும் ஏதாவது பேசிக் கொண்டே இருப்பேன். அது இப்படத்தில் இல்லை.

இயக்குனரை பற்றி?

இருவருக்குமே ஒன்றாக சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. காந்தி சிலை பின்னால், கடற்கரையில், அவர் கதை சொல்ல, நான் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பேன். ‛வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்கிய போது, நான் அதில் உதவி இயக்குனராகவும்; நடிக்கவும் செய்தேன். ஆனால் அப்படம் வெளியாகவில்லை. எங்களின் நட்பு மட்டும் தொடர்ந்து. கோலமாவு கோகிலா படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அந்த கனவு நிறைவேறியுள்ளது.




 


டாக்டர் படத்தில் வன்முறை அதிகம் உள்ளதாக தெரிகிறதே?

நான் நடித்த படத்திலேயே ‛டாக்டர் படத்திற்கு தான் யு/ஏ சான்றிதழ். கதை அந்த மாதிரி. ஆனாலும் குடும்பத்துடன் படத்தை சிரித்துக் கொண்டே பார்க்கலாம். ராணுவ மருத்துவராக நடித்துள்ளேன்

என கூறினார்.


Source - Dinamalar

Similar News